Search This Blog

Tuesday, June 12, 2018

2nd Chapter Vān ChiRappu


2nd Chapter Vān chiRappu (வான் சிறப்பு)
வான் – மழை; Rain
சிறப்பு - தலைமை; superiority

After LORD the poet has given importance to RAIN.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்; The meaning of this saying is that the greatness of the shade will be felt only after we have experienced the scorching heat of the sun. One thing here is to be noted that we praise something when we had experienced the absence of it.  The worth of something is not felt when it is received in a matter of routine and it is taken for granted.  So may be Thrivalluvar might have experienced draught in sometime of his life time. It is just my assumption.

Andal in Thiruppavai had requested for the rain as below:
Theengindri naadellam thingal mummari peidhu).
“A country should neither have drought nor should it have rain that would wash everything away. It should rain in the optimum quantity for the people to enjoy its benefits. The rain should pour thrice in a month.”

குறள் 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
Trans-
literation
VāninR  ulagam Vazhangi Varudhalāl
Thānamizhdham endRuNaraR Pātru
Meaning by
words
வான் - மழை; Rain
நின்று எப்பொழுதும்;  பருவம் தவறாது பெய்ய; Always
உலகம்  - பூமி; the earth

வழங்கி வருதலால் தான்; (சீவராசிகள்) வாழ்ந்து வருவதால் தான்; sustains the living beings

அமிழ்தம் - அமிர்தம்; Ambrosia

என்றுணரற் பாற்றுஎன்று எண்ணத்தக்தாகும்; can be regarded
Meaning in
Tamil
மழை பருவம் தவறாது பெய்ய சீவராசிகள் வாழ்ந்து வருவதால் தான் அம்மழை அமிர்தம் என்று எண்ணத்தக்தாகும்
Meaning in
English
It is the unfailing fall of rain that sustains the word. Therefore, look upon rain as the nectar of life
Explanation
Rain is held as nectar of heaven because it sustains and rejuvenates life on earth. Because elixir like quality exists in rain the poet calls is as nectar


குறள் 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
Trans-
literation
Thuppārkkuth Thuppāya Thuppākkith Thuppārkkuth
Thuppāya Thōum Mazhai
Meaning by
words
துப்பார்க்கு -  உண்பார்களுக்கு; for the food eaters  
துப்பாய -  நல்ல; good
துப்பாக்கித் –உணவுகளை உண்டாக்கி; produces food
துப்பாய தூஉம் – தான் ஓர் உணவாக இருப்பதும்; it itself forms a food as drinking water
மழை - மேகத்தினின்று பொழியும் நீர்; Rain
Meaning in
Tamil
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
Meaning in
English
Rain produces the food we eat; it also forms a food as drinking water.
Explanation
Here he shows the essentiality of rain.  Rain helps to build every food while it is a food in the form of drinking water.

குறள் 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
Trans-
literation
viN indru poippin virinīr Viyanulakaththu
uLnin Ru udatrum pasi
Meaning by
words
விண்இன்று -  மேகத்தின்று;  From the Clouds
பொய்ப்பின் - வேண்டிய காலத்துமழை பெய்யாது நின்று விடுமாயின்; if rain does not fall at proper time and stops
விரிநீர்  வியனுலகத்து உள் - பரந்த கடலால் சூழப்பட்ட உலகத்துள்; earth surrounded by the vast ocean
நின்று உடற்றும் பசிபசி நிலைத்து நின்று ௨யிர்களை வருத்தும்; hunger will trouble all the living beings.
Meaning in
Tamil
மழை பெய்யாமல் போய்விடுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
Meaning in
English
If clouds fail to rain, hunger will strangle al the living beings on the earth though it is surrounded by the vast oceans
Explanation
Even though earth is covered by 3/4th of water if the clouds deceive or does not release water as rain the entire living beings will suffer.

குறள் 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
Trans-
literation
Erin uzhāar uzhavar puyalennum
Vāri VaLangundrik Kāl
Meaning by
words
ர் - -கலப்பை; plow
உழாஅர்  -  உழ மாட்டார்; will not plough
உழவர்  -  வேளாண்மை செய்பவர்; farmer
புயல்என்னும் – மழை; rain
வாரி  -  வருவாய்; income
வளம் செழுமை; prosperity
குன்றிக் கால். குறைந்து விட்டால்; got reduced
Meaning in
Tamil
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்
Meaning in
English
If the rainfall is inadequate the farmers will not use the plow.
Explanation
Here rain is input and agricultural produce is output. If there is not sufficient rain ploughing the fields will not give any results so the farmer will not use the plow to plough the fields.

குறள் 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Trans-
literation
Keduppadhōum Kettārkkuch chārvāimatRānge
eduppadhōum ellaam Mazhai
Meaning by
words
கெடுப்பதூஉம்  - பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும்; failed rain can harm
கெட்டார்க்குச்  - மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும்; those who suffered by absence of rain
சார்வாய்மற்றாங்கே - துணையாய் அவ்வாறே; rain also supports
எடுப்பதூஉம் - பின்பு அவரைத் தூக்கி விடுவதும்; llater it rejuvenates them
எல்லாம் மழை. – ஆகிய எல்லாம் செய்வது மழையேrain does everything
Meaning in
Tamil
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
Meaning in
English
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune
Explanation
Rain can do everything.  Both scanty and too much rainfall can create havoc.  It alone can bail out from the miseries it has caused.

குறள் 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
Trans-
literation
visumpin thuLivīzhin allālmaR Rānge
pasumpul thalaikāN paridhu
Meaning by
words
விசும்பின் துளிவீழின் அல்லால் - மேகத்திலிருந்து மழை துளிவிழாமல் போனால் If rain does not  fall from the clouds
மற் றாங்கே அப்பொழுதே ; that moment
பசும்புல் தலை - ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும்;heads of lowest grass which has one sense
காண்பு அரிது. - காண முடியாது; can’t be seen
Meaning in
Tamil
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.
Meaning in
English
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen
Explanation
If rains does not fall not even the grass can grow.  The existence of other lives is out of question

குறள் 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
Trans-
literation
nedungadalum thannīrmai kundrum thadindhezhili
thānnalkā thāki vitin
Meaning by
words
நெடுங்கடலும்  - பெரிய கடலும்; vast expanse of sea
தன்நீர்மை குன்றும் - அதனுடைய தண்ணீர் குறையும்; the sea will lose its depthj
ழிலி தான் தடிந்து நல்கா தாகி விடின். மேகம் தன்னை குறைத்து கடல்மீது பெய்யாது விடுமானால்; if cloud does not give rain to the sea
Meaning in
Tamil
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
Meaning in
English
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)
Explanation
The main source of water vapour for the formation of water bearing cloud is the sea-water.  It the rain does not fall the sea will also lose its depth and richness.  Those who have wealth if they are not useful to the society then they will also lose their wealth.

குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
Trans-
literation
siRappodu pūsanai sellādhu vānam
vaRakkumael Vānōrkkum īNdu
Meaning by
words
சிறப்பொடு  - நன்கு மதிக்கப்ப்டும் படியாக; in better ways
பூசனை - வழிபாடு; worship
செல்லாது -  நடக்காது; will not happen
வானம் -  மழை; Rain
வறக்குமேல்பெய்யாவிட்டால்; if does not fall
வானோர்க்கும்  - தேவர்க்கும்; celestial ones
ஈண்டு. – இவ்வுலகில்; in this world
Meaning in
Tamil
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் தேவர்க்கும் நன்கு மதிக்கப்ப்டும் படியாக  வழிபாடு நடக்காது. வழிபாடு என்பது தினமும் செய்யும் பூசை, ஆண்டு தோறு நடக்கும் திருவிழாக்கள், கதை நிகழ்ச்சி, ஊர்வலம் எனாறவற்றை குறிக்கும்
Meaning in
English
Should the rails fail the worship of heavenly ones in festivals and daily rites will not take place in this world.
Explanation
If there is no rain famine would rage, farmers won’t plough, there will be no vegetation and not even grasses will grow. Now in this situation people will pray but will not be in a position to offer proper worship. So for proper worship also rain is required.
குறள் 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
Trans-
literation
thānam thavam iraNdum thangaa viyan ulagam
vānam vazhangaa thenin
Meaning by
words
தானம் - கொடை
தவம் – நோம்பு, வேள்வி ; penance, ritual sacrifice
இரண்டும்இரண்டும் - both
தங்கா - ளவாகமாட்டா
வியன்உலகம் - அகன்ற நிலஉலகம்; Expansive world
வானம் முகில்; clouds
வழங்காது செய்யாது; will not perform (here will not rain)
னின் – என்றால்; then
Meaning in
Tamil
பிறர் பொருட்டு செய்யும் கொடையும்,  தம் பொருட்டு செய்யும் நோம்பும், வேள்வியும் இந்த பெரிய உலகத்தில் நடைபெறாது முகில்கள் மழை பெய்ய செய்யாமல் போனால்.
Explanation in
Tamil
மழை பெய்யாமல் போனால் குடிக்க நீரும் உண்ண உணவும் இருக்காது. அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் பிறர்க்கா செய்யும் கொடையும் தனக்காக செய்யும் நோம்பும், வேள்வியும் நடைபெறாது.
Meaning in
English
If rain fails donation of alms to others and ritual sacrifice and penance one for themselves will not take place in this expansive world,
Explanation
If rain does not happen survival in this expansive world is impossible due to want of food and water.  When one’s life is at stake how can donation or ritual sacrifice can take place. They will not happen


குறள் 20
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
Trans-
literation
nīrindru amaiyādhu ulagenin yāryārkkum
vānindru amaiyādhu ozhukku
Meaning by
words
நீரின்று நீர் இல்லாமல்; without water
மையாது முடியாது; impossible
கு உலகம்; world
னின் என்றால்’ then
யார்யார்க்கும் எவ்வகை மேம்பட்டவர்க்கும்; whomsoever
வானின்று மழை இல்லாமல்; without rain
மையாது முடியாது; impossible
ழுக்கு நீர் ஓடுதல்; running water
Meaning in
Tamil
எவ்வகை மேம்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலகத்தில் வாழ முடியாது. மழை இல்லாமல் அந்த ஓடும் நீரும் கிடைக்காது
Explanation in
Tamil
பெரியவர் சிறியவர் என்று இல்லாமல் எல்லோர்க்கும் நீர் இல்லாமல் உலகத்தில் வாழ முடியாது. மழை இல்லாமல் அந்த ஓடும் நீரும் கிடைக்காது
Meaning in
English
Whoever it may be nobody can live in this world without water and this water cannot be possible without rain.
Explanation
Irrespective of any distinction for everybody water is required to live and this water comes from rain and there is no other source.



The poet compared Rain with nectar. Rain produces the food we eat; it also forms a food as drinking water. Even though earth is covered by 3/4th of water without rain the entire living beings will suffer. Even the sea will be diminished without rain. Rain by its absence ruins men; and by its existence restores them to fortune. If there is no rain famine would rage, farmers won’t plough, there will be no vegetation and not even grasses will grow. Now in this situation people will pray but will not be in a position to offer proper worship. So for proper worship also rain is required. If rain fails donation, ritual sacrifice and penance will not take place. Irrespective of any distinction for everybody water is required to live and this water comes from rain and there is no other source.

1 comment:

  1. Your doing a great job. Keep it up im learning a lot from your blog

    ReplyDelete

Thirukurral

Thirukkural Kalvi Thirukural Thirukurral written by Valluvar is considered one of the most widely translated non-religio...